தெலுங்கு நடிகர் மனோஜ் மஞ்சுக்கு கொரோனா
ADDED : 1377 days ago
பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகன் மனோஜ் மஞ்சு. குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கியவர் டோங்கா டோங்கி படத்தின் மூலம் ஹீரோவானர். அதன்பிறகு பல படங்களில் நடித்தார். ஆக்ஷன் ஹீரோவாக வளர்ந்து வருகிறார். இவரது பல படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.
மனோஜ் மஞ்சுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் எழுதியிருப்பதாவது: எனக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் என்னைச் சந்தித்த அனைவரைரும் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும். என்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம். உங்கள் அனைவரின் அன்பு மற்றும் ஆசீர்வாதத்துடன் நான் முற்றிலும் நலமாக இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.