உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அர்ஜூன் கபூர் குடும்பத்தை மீண்டும் தாக்கிய கொரோனா

அர்ஜூன் கபூர் குடும்பத்தை மீண்டும் தாக்கிய கொரோனா

தயாரிப்பாளர் போனி கபூரின் மகன் நடிகர் அர்ஜூன் கபூர். இவருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்த நிலையில் அதேபோன்று இப்போது மீண்டும் கபூர் குடும்பத்தை கொரோனா தாக்கி உள்ளது.

அர்ஜூன் கபூருக்கும், அவரது சகோதரி அன்ஷூலா கபூருக்கும் திடீர் காய்ச்சல் ஏற்பட்டது. பரிசோதனை செய்ததில் இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதோடு அர்ஜூன் கபூர் உறவினரும், தயாரிப்பாளருமான ரியா கபூர், அவரது கணவர் கரண் பூலானி ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மும்பையில் உள்ள அர்ஜூன் கபூர் வீட்டை மும்பை சுகாதாரத்துறை சீல் வைத்துள்ளது. அந்த இடங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்டவர்கள் ஓட்டல்களிலும், தனி வீடுகளிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !