சிம்புவுக்கு தங்கமான மனது - நிதி அகர்வால்
ADDED : 1382 days ago
இந்தி சினிமாவில் அறிமுகமான நிதி அகர்வால் தென்னிந்திய மொழிகளில் வேகமாக முன்னேறி வருகிறார். தமிழில் ஈஸ்வரன், பூமி என 2 படங்களில் நடித்தார். அடுத்து உதயநிதியுடன் நடித்து வருகிறார். தமிழில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளதையடுத்து அடுத்தடுத்த தமிழ் படங்களில் நடிக்க நிதி அகர்வால் ஒப்பந்தமாகி வருகிறார். சமூக வலைத்தளத்தில் தீவிரமாக இருக்கும் நிதி அகர்வால், தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். விஜய் பற்றி ஒரு வார்த்தை என்ற கேள்விக்கு 'மாஸ்டர்' என்று பதிலளித்துள்ளார். சிம்புவை பற்றி ஒரு வார்த்தை என்பதற்கு தங்கமான இதயம் கொண்ட மனிதர் என்று தெரிவித்துள்ளார்.