காதலரை கட்டிப்பிடித்து புத்தாண்டை கொண்டாடிய நயன்தாரா
ADDED : 1387 days ago
விக்னேஷ் சிவன், நானும் ரவுடி தான் படத்தின் மூலம் நயன்தாராவுடன் இணைந்தார். அதிலிருந்து அவர்கள் காதலில் இருப்பதாக பேசப்பட்டது. இவர்கள் எப்போது திருமணம் செய்துக் கொள்வார்கள் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், தனக்கு நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதாக, டிவி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட நயன்தாரா மெளனம் கலைத்தார்.
இருவரும் இணைந்து வெளிநாடுகளில் சுற்றுவதையும் அந்த படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளனர். இந்த புத்தாண்டை இருவரும் துபாயில் கொண்டாடி உள்ளனர்.இதற்காக துபாய் சென்றுள்ள விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா, அங்குள்ள உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிபா அருகே புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடினர். அப்போது இருவரும் கட்டிப்பிடித்து முத்தமிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தற்போது இந்த வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.