ஜன.,26ல் தமிழரசன் ரிலீஸ்
ADDED : 1516 days ago
கோடியில் ஒருவன் படத்திற்கு பின் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் பல படங்கள் உருவாகி வருகின்றன. இவற்றில் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள படம் ‛தமிழரசன்'. இவருடன் சுரேஷ் கோபி, ரம்யா நம்பீசன், சோனு சூட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டிற்கு தயாராகி வந்த நிலையில் ஜன., 26ல் குடியரசு தினத்தன்று படம் வெளியாகும் என அறிவித்துள்ளனர். அதிரடி ஆக்ஷன் படமாக தமிழரசன் தயாராகி உள்ளது.