மீனாட்சி அம்மனை தரிசித்த இளையராஜா
ADDED : 1385 days ago
மதுரை வந்த இசையமைப்பாளர் இளையராஜா, மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் முக்கியமான இசையமைப்பாளர் இளையராஜா. 1400 படங்களுக்கு மேல் இசையமைத்தவர் இப்போது பல படங்களுக்கு பிஸியாக அமைத்து வருகிறார். 2022ம் ஆண்டு இன்று பிறந்துள்ளது. நேற்று திருவண்ணாமலை சென்று சுவாமி தரிசனம் செய்த இளையராஜா இன்று புத்தாண்டில் மதுரை மீனாட்சி அம்மனை வழிபட்டார். முன்னதாக புத்தாண்டையொட்டி நேற்று இளமை இதோ பாடலை பாடி வீடியோவாக வெளியிட்டு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்தருந்தார் இளையராஜா.