உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பொங்கலுக்கு மாறுது விஷால் பட ரிலீஸ்

பொங்கலுக்கு மாறுது விஷால் பட ரிலீஸ்

பொதுவாக தமிழகத்தில் பொங்கல் ரிலீஸ் என்பது தமிழ் முன்னணி நடிகர்கள் நடித்த படங்களின் வெளியீட்டு கொண்டாட்டமாகத்தான் இருந்து வருகிறது. ஆனால் சமீபகாலமாக பான் இந்திய ரிலீஸ் என்கிற பெயரில் மற்ற மொழிகளில் உருவாக்கப்பட்ட படங்களும் கூட இங்கே பண்டிகை தினங்களில் வெளியாகி கல்லா கட்ட துவங்கியுள்ளன. அந்தவகையில் ஆர்ஆர்ஆர்(ஜன., 7), ராதே ஷ்யாம் படம் இந்த பொங்கல் பண்டிகையில் ரிலீஸாவதாக இருந்தன.

ஆனால் ஒமிக்ரான் பரவல் காரணமாக தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைக்கே அனுமதி என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆர்ஆர்ஆர் படம் பொங்கல் ரேஸில் இருந்து பின்வாங்கியுள்ளன. ஏற்கனவே தமிழில் அஜித்தின் வலிமை மட்டுமே பொங்கல் ரிலீஸ் என அறிவிக்கபட்டிருந்த நிலையில் தற்போது விஷாலின் வீரமே வாகை சூடும் படமும் பொங்கல் பண்டிகை ரிலீஸாக வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதற்கு முன்னதாக இந்தப்படம் ஜன-26ல் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆர்ஆர்ஆர் படம் பின்வாங்கியதால் அவற்றுக்கான தியேட்டர்களில் பாதி, வலிமைக்கு சென்றாலும் மீதியுள்ள தியேட்டர்கள் கிடைத்தாலே அதை வைத்தே விஷாலின் வீரமே வாகை சூ(டிவி)டும். இப்படித்தான் தீபாவளியின்போது அண்ணாத்த படத்துடன் தனது எனிமி படத்தையும் துணிந்து ரிலீஸ் செய்தார் விஷால்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !