உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தனுஷின் வாத்தி துவங்கியது

தனுஷின் வாத்தி துவங்கியது

தனுஷ் நடிப்பில் தமிழில் ‛‛மாறன், திருச்சிற்றம்பலம்'' படங்கள் தயாராகி வருகின்றன. இதையடுத்து நேரடி தெலுங்கு படத்தில் தனுஷ் நடிக்கிறார். முதல் படம் சேகர் கம்முலா படமாக உருவாக இருந்த நிலையில் இப்போது அவரது அடுத்த படமான வாத்தி முதலில் துவங்குகிறது. தமிழ், தெலுங்கில் தயாராகும் இந்த படத்தை வெங்கி அட்லூரி இயக்குகிறார். இப்படத்தின் பூஜை ஐதராபாத்தில் இன்று(ஜன., 3) துவங்கியது. இதில் தனுஷ், நாயகி சம்யுக்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இயக்குனர் திரி விக்ரம் சீனிவாஸ் கிளாப் அடித்து துவக்கி வைத்தார். ஜன., 5ல் முறைப்படி படப்பிடிப்பை துவங்குகின்றனர். ஒரேக்கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடிக்க எண்ணி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !