உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'வலிமை' வாய்ப்பு - அஜித்துக்கு நன்றி சொல்லும் புகழ்

'வலிமை' வாய்ப்பு - அஜித்துக்கு நன்றி சொல்லும் புகழ்

விஜய் டிவியில் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் புகழ். அவருடைய நகைச்சுவை உணர்வுக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பே பெற்றார்.

சந்தானம் நடித்து கடந்த வருடம் வெளிவந்த 'சபாபதி' படத்தில் நடித்தார் புகழ். அதன்பின் பல படங்களில் நடித்து வருகிறார். 'வலிமை' படத்திலும் புகழ் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

அப்படத்தின் டிரைலர் வெளிவந்து ரசிகர்கள் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில் 'வலிமை வாய்ப்பு'க்கு நன்றி தெரிவித்து, “அஜித் சார்... இந்த சந்தோஷத்த எப்படி வெளிப்படுத்தறதுனு எனக்கு தெரியல. உங்க கூட பயணிக்கற இந்த வாய்ப்பு அளித்த அனைவருக்கும் நன்றிகள்... என்றும் அன்பும், நன்றிகளுடன் புகழ்,” எனப் பதிவிட்டுள்ளார். அதற்கு மட்டும் ஐந்து லட்சத்திற்கும் மேல் அவருக்கு லைக்குகள் கிடைத்துள்ளது.

'சபாபதி' படத்தில் பெயர் வாங்கத் தவறிய புகழ் அடுத்து வரும் படங்களில் ரசிகர்களைக் கவர்வாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !