உன்னிமுகுந்தன் வீட்டில் ரெய்டு
ADDED : 1370 days ago
தமிழ் ரசிகர்களுக்கு தனுஷ் நடித்த 'சீடன்' படம் மூலமாக அறிமுகமானவர் மலையாள நடிகர் உன்னி முகுந்தன். அதுமட்டுமல்ல பாகமதி படத்தில் அனுஷ்காவின் ஜோடியாக நடித்த இவர், தற்போது யசோதா என்கிற படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார். இந்தநிலையில் பாலக்காட்டில் ஓட்டப்பாலத்தில் உள்ள உன்னிமுகுந்தனின் அலுவலகத்தில் வருமானவரி துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தியுள்ளனர்.
தற்போது உன்னிமுகுந்தன் மேப்படியான் என்கிற படத்தில் நடிப்பதுடன் அந்த படத்தை தானே தயாரித்தும் வருகிறார். இதற்கான நிதி இவருக்கு எப்படி கிடைத்தது என்பது குறித்த விசாரணையையும் அதற்கான ஆதாரங்களை ஆய்வு செய்வதற்காகவும் இந்த சோதனை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த சோதனையில் எதுவும் கைப்பற்றப்பட்டதா என்கிற விபரங்கள் எதுவும் தெரியவில்லை.