ஓடிடி நிறுவனங்கள் மீது சீனு ராமசாமி புதிய புகார்
ADDED : 1378 days ago
உலக அளவில் திரைப்பட துறையில் ஓடிடி நிறுவனங்கள் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன. கொரோனாவுக்கு பின் இன்னும் அசுர வளர்ச்சி எடுத்துள்ளன. இந்நிலையில் ஓடிடி நிறுவனங்கள் மீது இயக்குனர் சீனு ராமசாமி பகீர் புகார் ஒன்றை கூறியுள்ளார்.
சொன்ன தேதியை விட திரைப்படத்தை சற்றுத் தள்ளி வெளியிட்டால் தந்த அட்வான்ஸ் தொகைக்கு வட்டி வசூலிக்கின்றன சில ஓடிடி நிறுவனங்கள். கதைக்கு முக்கியத்துவம் தரும் தயாரிப்பாளர்கள் வளர்ந்தால் தானே ஓடிடி நிறுவனங்களுக்கு பெருமை, கதை படங்கள் வளரும். புதியவர்கள் தழைப்பர்.. என்று ஆதங்கத்துடன் பதிவிட்டுள்ளார்.
சீனுராமசாமி கூடல் நகர் படம் மூலம் அறிமுகமானார். தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே உள்ளிட்ட படங்கள் மூலம் முன்னணி இயக்குனர் ஆனார்.