உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வரலாற்று உண்மைகளை திரிக்கிறது : ஆர்ஆர்ஆர் படத்திற்கு தடை கேட்டு வழக்கு

வரலாற்று உண்மைகளை திரிக்கிறது : ஆர்ஆர்ஆர் படத்திற்கு தடை கேட்டு வழக்கு

பாகுபலி படத்திற்கு பிறகு எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கி உள்ள படம் ஆர்ஆர்ஆர். இதில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் உள்பட பலர் நடித்திருக்கிறார். சுமார் 400 கோடி ரூபாய் செலவில் தயாராகி உள்ள இந்த படம் நேற்று வெளிவருவதாக இருந்தது. கொரோனா தொற்று பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த படம் ஆந்திராவில் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய கொமரா பீம், அல்லூரி சீதாராம ராஜு என்கிற வீரர்களை பற்றிய கதை. இந்த நிலையில் படத்தை தடை செய்ய வேண்டும் என்று மேற்கு கோதாவரியை சேர்ந்த அல்லூரி சவும்யா என்பவர் தெலுங்கானா உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீத்தாராமராஜு, கொமரா பீம் ஆகியோர் ஆங்கிலேயர்களிடம் வேலை பார்த்தது போன்று தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது. உண்மைக்கு புறம்பாக படத்தை உருவாக்கி உள்ளனர். எனவே படத்தை தடை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !