உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மலையாளத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புலிமட

மலையாளத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புலிமட

தென்னிந்திய மொழிகள் மட்டுமல்ல, பாலிவுட்டிலும் கால் பதித்து பான் இந்தியா நடிகையாக மாறிவிட்டார் ஐஸ்வர்யா ராஜேஷ். அந்த வகையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ஜோமோண்டே சுவிசேஷங்கள் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் மலையாள திரையுலகில் நுழைந்தார் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது மீண்டும் மலையாளத்தில் புலிமட என்கிற படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். புலிமட என்றால் புலி வசிக்கும் இடம் என அர்த்தம்.

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. இந்த படத்தில் குணச்சித்திர நடிகர் ஜோஜு ஜார்ஜ் முக்கிய வேடத்தில் நடிக்க இன்னொரு கதாநாயகியாக ஜெய்பீம் புகழ் லிஜோமொழ ஜோஸ் நடிக்கிறார். மம்முட்டி, நயன்தாரா நடித்த புதிய நியமம் என்கிற திரில்லர் படத்தை இயக்கிய ஏ.கே.சாஜன் தான் இந்த படத்தை இயக்குகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !