சிம்புவுக்கு டாக்டர் பட்டம்
ADDED : 1384 days ago
மாநாடு படத்தை அடுத்து வெந்து தணிந்தது காடு, பத்துதல, கொரோனா குமார் போன்ற படங்களில் நடிக்கிறார் சிம்பு. இந்த நிலையில் சிம்புவுக்கு பல்கலைக்கழகம் சார்பில் டாக்டர் பட்டம் வழங்க இருப்பதாக வெளியான செய்தியை சிம்பு ரசிகர்களை வைரலாக்கி வருகிறார்கள்.
மேலும், திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு, கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக நடிகர், இயக்குனர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகம் காட்டி வருகிறார். அவரது இந்த சாதனையை பாராட்டி ஐசரி கணேசனின் வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பில் அவருக்கு இந்த டாக்டர் பட்டம் வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐசரி கணேசன்தான் கவுதம்மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் வெந்து தணிந்தது காடு படத்தை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.