உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மெஹாலி, இஷா குப்தாவுக்கு கொரோனா

மெஹாலி, இஷா குப்தாவுக்கு கொரோனா

கோல்கட்டாவை சேர்ந்தவர் மெஹாலி மீனாட்சி. ஜித்தன் 2 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு பா.விஜய் இயக்கிய ஆருத்ரா படத்தில் நடித்தார். விக்ரம் நடித்த ஸ்கெட்ச் படத்தில் நடித்தார். தற்போது இறுதி முயற்சி, அறம்செய் படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர பெங்காலி படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது: முதலில் லேசான அறிகுறிகள் தோன்றியது. உடனே மருத்துவ பரிசோதனை செய்ததில் தொற்று உறுதியானது. இப்போது வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதே போன்று பாலிவுட் நடிகை இஷா குப்தாவும் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக கூறியிருக்கிறார். அதோடு கடந்த ஒரு வாரத்தில் என்னோடு தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள், பாதுகாப்பாக இருங்கள் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார். பாலிவுட் படங்களில் கவர்ச்சியாக நடித்தும், ஒரு பாடலுக்கு ஆடியும் வருகிறவர் இஷா குப்தா. தமிழில் யார் இவன் என்ற படத்தில் நடித்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !