உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அஜித்துக்கு நன்றி கூறிய சிறுத்தை சிவா

அஜித்துக்கு நன்றி கூறிய சிறுத்தை சிவா

அஜித் நடித்த வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் என நான்கு படங்களை அடுத்தடுத்து இயக்கியவர் சிறுத்தை சிவா. இந்த நிலையில் தற்போது சமூகவலைதளத்தில் அஜித்துக்கு நன்றி தெரிவித்து அவர் ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதில், ஜனவரி பத்தாம் தேதி தான் வீரம் மற்றும் விஸ்வாசம் ஆகிய இரண்டு திரைப்படங்களும் வெளியான நாள். இந்த படங்கள் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது. எனக்கு மட்டுமின்றி என்னுடைய படக்குழுவினர் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சியான நாள் இது. எனவே அஜித், அவரது ரசிகர்கள், மீடியா நண்பர்கள், சினிமா ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று சிறுத்தை சிவா அந்த பதிவில் தெரிவித்து இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !