ஹீரோயின் ஆனார் தர்ஷா குப்தா
ADDED : 1360 days ago
சின்னத்திரை நட்சத்திர நாயகி தர்ஷா குப்தா. அவளும் நானும் என்ற தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார். அதன்பிறகு முள்ளும் மலரும், செந்தூரப்பூவே தொடர்களில் நடித்தார். தற்போது சினிமாவில் ஹீரோயின் ஆகிறார்.
நெப்டியூன் எண்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தில் தர்ஷா குப்தாதான் நாயகி. நாயகனாக அசோக் குமார் நடிக்கிறார். டைகர் தங்கதுரை,அங்காடித்தெரு மகேஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இன்பான்ட் பரத் ஒளிப்பதிவு செய்கிறார். ஜெய்கிருஷ்ணா இசை அமைக்கிறார். குருசேனாபதி இயக்குகிறார்.
படம் பற்றிஅவர் கூறியதாவது: ஒரு மலை பிரதேசத்தில் அடுத்தடுத்து நடக்கின்ற விசித்திரமான கொலைகளை மையமாக வைத்து உருவாகும் படம். ஏற்காடு, மலேசியா மற்றும் பல இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது, என்றார்.