மகளுடன் கொஞ்சி மகிழும் வீடியோவை வெளியிட்ட ஸ்ரேயா
ADDED : 1360 days ago
தமிழில் ஜெயம் ரவி நடித்த மழை என்ற படத்தில் அறிமுகமானவர் ஸ்ரேயா. அதையடுத்து ரஜினியுடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், விக்ரமுடன் கந்தசாமி என பல படங்களில் நடித்தார். கடந்த 2018ம் ஆண்டு ரஷ்ய நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் ஆண்ட்ரே கோர்ச்சேவ் என்பவரை திருமணம் செய்துகொண்ட ஸ்ரேயாவுக்கு கடந்த ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதை பல மாதங்களுக்கு பிறகு தனது சோசியல் மீடியாவில் தெரிவித்திருந்தார்.
அதையடுத்து தனது மகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள ஸ்ரேயா, தற்போது மீண்டும் அது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதோடு, எனக்கு நீ எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறாய். என் இதயம் என்றும் உன்னுடந்தான் என்றும் பதிவிட்டிருக்கிறார் ஸ்ரேயா.