உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / புஷ்பா பட பாடலுக்கு நடனமாடிய யாஷிகா ஆனந்த்!

புஷ்பா பட பாடலுக்கு நடனமாடிய யாஷிகா ஆனந்த்!

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் அறிமுகமான யாஷிகா ஆனந்த் அதையடுத்து பல படங்களில் நடித்து வேகமாக வளர்ந்து கொண்டிருந்தார். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார் விபத்தில் சிக்கியதால் சிகிச்சை பெற்று வந்தவர் தற்போது உடல் நலம் பெற்று மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கு தயாராகி விட்டார்.

இந்தநிலையில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் இடம்பெற்ற சாமி சாமி என்ற பாடலுக்கு நடனமாடி அந்த வீடியோவை சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார் யாஷிகா ஆனந்த். பாவாடை தாவணி கெட்டப்பில் அவர் ஆடி உள்ள அந்த நடன வீடியோ லைக் மற்றும் கமெண்ட் குவித்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !