கஜினியாக மாறிய துல்கர் சல்மான்
ADDED : 1355 days ago
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் வெற்றியை தொடர்ந்து துல்கர் சல்மான் நடிப்பில் மீண்டும் தமிழில் உருவாகியுள்ள படம் 'ஹே ஷினாமிகா'. நடன இயக்குனர் பிருந்தா இயக்குனராக அறிமுகமாகியுள்ள இந்த படத்தில் காஜல் அகர்வால் மற்றும் அதிதி ராவ் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்த படத்தில் இருந்து சமீபத்தில் அச்சமில்லை என்கிற பாடல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த வரவேற்பு குறித்து தனது ஆச்சரியத்தை பகிர்ந்துள்ள துல்கர் சல்மான், “என்ன.. மூன்று நாட்களில் மூன்று மில்லியன் பார்வைகளா..? இந்தப்பாடல் காட்சியை படமாக்கும்போது கஜினி போல மாறி என்னுடைய ஸ்டெப்ஸ்களை மறந்து விடுவேன். அந்தவகையில் நடனத்தில் நான் செய்த தவறுகளை வெளியே தெரியாமல் அழகாக எடிட் செய்துள்ள பிருந்தாவுக்கு நன்றி” என கூறியுள்ளார்.