உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கேஜிஎப் -2 படத்துடன் மோதும் விஜய்யின் பீஸ்ட்

கேஜிஎப் -2 படத்துடன் மோதும் விஜய்யின் பீஸ்ட்

நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்பட பலர் நடித்திருக்கும் படம் பீஸ்ட். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆங்கில புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் படக்குழு வெளியிடவில்லை. இந்த நிலையில் வருகிற ஜனவரி 26ம் தேதி இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் பீஸ்ட் படம் தமிழ் புத்தாண்டையொட்டி ஏப்ரல் 14ம் தேதி திரைக்கு வருவது உறுதியாகி இருக்கிறது. இதேநாளில் கேஜிஎப்-2 படமும் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !