'ஆர்ஆர்ஆர்' ரிலீஸ் - புதிய அறிவிப்பு
ADDED : 1452 days ago
ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடித்துள்ள 'ஆர்ஆர்ஆர்' பட வெளியீடு பற்றிய புதிய அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
“நாட்டில் தற்போது நிலவும் பரவல் சூழ்நிலை சரியாகும் பட்சத்தில், அனைத்துத் தியேட்டர்களும் முழு இருக்கைகளுடன் திறக்கப்படும் போது, நாங்கள் படத்தை மார்ச் 18ம் தேதி வெளியிடத் தயாராக இருக்கிறோம். இல்லையெனில் ஏப்ரல் 22ம் தேதி படம் வெளியாகும்,” என அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்கள்.
கடந்த சில தினங்களாக 'ஆர்ஆர்ஆர்' படம் பற்றிய வெளியீடு பற்றி பல்வேறு தகவல்கள் வந்த நிலையில் அவர்களே வெளியீடு பற்றி தெளிவாகக் கூறியுள்ளார்கள். இதனால், மற்ற படங்களின் வெளியீட்டை சம்பந்தப்பட்டவர்கள் திட்டமிட வசதியாகி உள்ளது.