தனக்குத் தானே மேனேஜரான யோகி பாபு
ADDED : 1375 days ago
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக இருந்து வரும் யோகி பாபு சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். தான் முன்னணி காமெடியன் ஆனபிறகு சசி என்பவரை கால்ஷீட்டை கவனித்துக்கொள்ளும் மேனேஜராக நியமித்திருந்தார் யோகிபாபு. ஆனால் தற்போது யோகிபாபுவின் மேனேஜர் சசி அந்தப் பணியிலிருந்து விலகிக் கொண்டு உள்ளார்.
இதையடுத்து யோகி பாபு வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், இனிமேல் எனக்கு மேனேஜர் என்று தனிப்பட்ட முறையில் யாரும் கிடையாது. என்னுடைய கால்சீட்டுகளை நானே கவனித்துக் கொள்ளப் போகிறேன். அதனால் படம் சம்பந்தமாக அனைவரும் என்னை நேரடியாகவே அணுகலாம் என்று தெரிவித்துள்ளார்.