ரிலீஸ் வீடியோ வெளியிடும் யாஷிகா ஆனந்த்
ADDED : 1387 days ago
கார் விபத்துக்கு பிறகு சில மாதங்களாக சிகிச்சை எடுத்து வந்த நடிகை யாஷிகா ஆனந்த் தற்போது உடல்நலம் தேறி விட்டதை அடுத்து மீண்டும் சினிமாவில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். அதன் காரணமாக சோசியல் மீடியாவில் புகைப்படங்கள், வீடியோக்கள் என வெளியிட்டு ஒரு பரபரப்பை ஏற்படுத்தும் முயற்சியில் அவர் ஈடுபட்டிருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்தில் புஷ்பா படத்தில் இடம்பெற்ற சாமி சாமி என்ற பாடலுக்கு ஒரு நடனமாடி அது குறித்த வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருந்தார் யாஷிகா ஆனந்த். அதையடுத்து அட்ரங்கி ரே படத்தில் இடம் பெற்ற சக்கத்தே பாடலுக்கு ரிலீஸ் வீடியோ வெளியிட்டவர் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதி - நயன்தாரா இடம்பெறும் நான் பிழை என்ற பாடலுக்கும் ரிலீஸ் வெளியிட்டுள்ளார்.