உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சென்னையில் சிவகார்த்திகேயனின் தெலுங்கு படம் தொடங்குகிறது

சென்னையில் சிவகார்த்திகேயனின் தெலுங்கு படம் தொடங்குகிறது

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் 100 கோடி வசூல் சாதனை புரிந்து அவரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது. அதோடு இந்த டாக்டர் படம் தெலுங்கிலும் வருண் டாக்டர் என்ற பெயரில் டப் செய்யப்பட்டு வெளியாகி வெற்றி பெற்றது. இந்த நிலையில் அடுத்தபடியாக டான் என்ற படத்தில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன், அடுத்து தெலுங்கில் ஜதிரத்னலு உள்பட சில படங்களை இயக்கிய அனுதீப் இயக்கும் தெலுங்கு படத்தில் நடிக்கப் போகிறார். தமிழ் - தெலுங்கில் உருவாகும் இப்படம் சிவகார்த்திகேயனின் 20-வது படமாகும். தமன் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் சென்னையில் தொடங்கப்பட உள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !