வித்யா பிரதீப்பின் ஸ்ட்ரைக்கர்
ADDED : 1430 days ago
சின்னத்திரையில் பிரபலமாக திகழ்ந்த வித்யா பிரதீப் இப்போது வெள்ளித்திரையில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார். ஹீரோயின், குணச்சித்ரம் என அவர் கைவசம் 10 படங்கள் உள்ளன. இந்நிலையில் எஸ்.ஏ.பிரபு என்பவரது இயக்கத்தில் ஸ்ட்ரைக்கர் என்ற படத்தில் நாயகியாக நடிக்கிறார். சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் படமாக உருவாகிறது.