கார்த்திக்கு ஜோடியாகும் சமந்தா?
ADDED : 1489 days ago
பொன்னியின் செல்வன் படத்தை அடுத்து விருமன் படத்தில் நடித்து முடித்துள்ள கார்த்தி, தற்போது சர்தார் படத்தில் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார். இதை அடுத்து ஜிவி பிரகாஷ் நடித்த பேச்சிலர் படத்தை இயக்கிய சதீஷ் செல்வகுமார் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார். இந்தப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டு நடிகர் நடிகை தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்த படத்திற்கு கார்த்திக்கு ஜோடியாக நடிப்பதற்கு சில நடிகைகள் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சமந்தாவை நடிக்க வைக்க முடிவெடுத்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் தயாராக உள்ளது.