உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூர்யா தயாரிக்கும் ஹிந்தி படத்தில் அக்சய்குமார்

சூர்யா தயாரிக்கும் ஹிந்தி படத்தில் அக்சய்குமார்

2020ல் சுதா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலா முரளி உள்பட பலர் நடித்த படம் சூரரை போற்று. இப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி வசூல் சாதனை செய்தது. இப்படத்தை தற்போது ஹிந்தியில் ரீமேக் செய்கிறார் சுதா. தான் நடிக்கும் படங்கள் மட்டுமின்றி மற்ற நடிகர்களை வைத்தும் தனது 2டி என்டர்டெய்ன்மென்ட் சார்பில் படங்களை தயாரித்து வரும் சூர்யா, தற்போது சுதா இயக்கும் சூரரை போற்று ஹிந்தி ரீமேக்கையும் தயாரிக்கிறார். இப்படத்தில் சூர்யா நடித்த வேடத்தில் அக்சய் குமார் நடிக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !