சாய்பல்லவியின் தீவிர ரசிகை நான் ; மதுபாலா
ADDED : 1346 days ago
தொண்ணூறுகளில் ரோஜா, ஜென்டில்மேன் என அடுத்தடுத்து இரண்டு ஹிட் படங்கள் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் நடிகை மதுபாலா. ஆனால் அதன்பிறகு தனக்கு கிடைத்த இடத்தை தக்க வைத்துக்கொள்ள தவறிய இவர் தற்போது மீண்டும் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் தெலுங்கில் வெளியான ஷியாம் சிங்கா ராய் படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டியுள்ளார் மதுபாலா.
குறிப்பாக சாய்பல்லவியின் நடனத்தைப் பற்றி குறிப்பிடும் போது அவர் ஒரு அற்புதமான டான்ஸர் என கூறியுள்ள மதுபாலா, விதவிதமான வார்த்தைகளால் அவரது நடிப்பையும் பாராட்டியதுடன் சாய்பல்லவியின் தீவிர ரசிகை நான் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் சமீபத்தில் தான் பார்த்த படங்களிலேயே மிகச்சிறந்த படம் இது என்றும் கூறியுள்ளார் மதுபாலா.