'நானே வருவேன்' ஆல்பம் நிறைவு : செல்வராகவன் தகவல்
ADDED : 1428 days ago
இயக்குனர் செல்வராகவன், இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா கூட்டணிக்கு நிறைய ரசிகர்கள் உண்டு. அவர்களது கூட்டணியில் இதற்கு முன்பு வெளிவந்த படங்களின் பாடல்கள், பின்னணி இசை பற்றி இன்றைக்கும் ரசிகர்கள் பாராட்டிப் பேசுவார்கள்.
தாமதமாக வெளிவந்த 'நெஞ்சம் மறப்பதில்லை' படத்திற்குப் பிறகு செல்வராகவன், யுவன்ஷங்கர் ராஜா கூட்டணி மீண்டும் 'நானே வருவேன்' படத்தில் இணைந்துள்ளது. இப்படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.
இப்படம் பற்றிய அப்டேட்டிற்காக மூவரது ரசிகர்களும் காத்திருந்தனர். இன்று அந்தக் காத்திருத்தலுக்காக ஒரு அப்டேட்டைக் கொடுத்துள்ளார் செல்வா. “யுவனுடன் 'நானே' வருவேன் ஆல்பத்தைத் தற்போதுதான் முடித்தேன். இதை உங்களுடன் ஷேர் செய்யக் காத்திருக்க முடியவில்லை,” என்று குறிப்பிட்டு யுவனுடன் எடுத்த ஒரு செல்பி புகைப்படத்தையும் ஷேர் செய்துள்ளார்.