ஜோதிகாவின் புதிய படத்தை இயக்கும் பிரியா
ADDED : 1527 days ago
திருமணத்துக்குப் பிறகு 36 வயதினிலே என்ற படத்தில் ரீ என்ட்ரி கொடுத்த ஜோதிகா அதன்பிறகு மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, உடன்பிறப்பே உள்பட பல படங்களில் நடித்தார். இந்த நிலையில் அடுத்தபடியாக கண்ட நாள் முதல், கண்ணா மூச்சி ஏனடா போன்ற படங்களை இயக்கிய பிரியா இயக்கும் படத்தில் ஜோதிகா நடிக்கப் போகிறார். இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படமும் சமூகத்தில் இல்லத்தரசிகள் சந்திக்கும் ஒரு முக்கிய பிரச்சனையை மையமாக கொண்ட கதையில் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு சில முன்னாள் ஹீரோயின்களும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.