உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ராம் படத்தில் இணைந்த சூரி

ராம் படத்தில் இணைந்த சூரி

வெற்றிமாறன் இயக்கும் விடுதலை படத்தில் கதையின் நாயகனாக நடித்து வரும் சூரி, சிவகார்த்திகேயனின் டான் உள்பட சில படங்களில் காமெடியனாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது மலையாள நடிகர் நிவின் பாலியை வைத்து ராம் இயக்கி வரும் படத்திலும் இன்று முதல் இணைந்திருக்கிறார் சூரி. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தை சிம்பு நடித்த மாநாடு படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

இதுகுறித்து சூரி கூறுகையில், ‛‛இன்று இனியதொரு தொடக்கம். இயக்குனர் அண்ணன் ராம் மற்றும் பிரதர் நிவின் பாலியுடன் முதல்முறையாக பயணிப்பதில் பெருமகிழ்ச்சி. அண்ணன் சுரேஷ் காமாட்சிக்கு நன்றி'' என்று அவர்கள் இருவருடனும் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார் சூரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !