உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மார்ச் 10ல் ‛எதற்கும் துணிந்தவன்' ரிலீஸ்

மார்ச் 10ல் ‛எதற்கும் துணிந்தவன்' ரிலீஸ்

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ் உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் ‛எதற்கும் துணிந்தவன்'. இமான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே சில பாடல்கள், டீசர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இதன் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸிற்கு தயாராகிவிட்டது. பிப்.,5ல் படத்தை வெளியிட இருந்தனர். ஆனால் கொரோனா பிரச்னையால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. இப்போது மார்ச் 10ல் படத்தை வெளியிடுவதாக அறிவித்துள்ளனர். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி 5 மொழிகளில் இந்தபடம் வெளியாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !