ரஜினி மகள் ஐஸ்வர்யாவுக்கு கொரோனா
ADDED : 1391 days ago
நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா, 40; கணவர் தனுஷை விவாகரத்து செய்வதாக சமீபத்தில் அறிவித்தார். தனுஷும் இதை உறுதிப்படுத்தி இருந்தார். இந்நிலையில், இசை ஆல்பம் ஒன்றுக்காக, தெலுங்கானா மாநிலம், ஐதராபாதில் தங்கியிருந்த ஐஸ்வர்யாவுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் சிகிச்சை பெற்று வரும் புகைப்படத்தையும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.