மாலத்தீவில் ஹனிமூன் கொண்டாட்டத்தில் பிகில் நடிகை
ADDED : 1334 days ago
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் படத்தில் விளையாட்டு வீராங்கனையாக நடித்தவர்களில் மலையாள நடிகை ரெபா மோனிகா ஜான் முக்கியமானவர். அதைத்தொடர்ந்து தற்போது விஷ்ணு விஷால் நடித்துள்ள எப்ஐஆர் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த ஜனவரி 9ல் தனது நீண்டநாள் காதலரான ஜோமோன் ஜோசப் என்பவரை திருமணம் செய்து கொண்டார் ரெபா மோனிகா ஜான்.
இந்நிலையில் தங்களது ஹனிமூன் மற்றும் காதலர் தின கொண்டாட்டத்திற்காக மாலத்தீவில் முகாமிட்டுள்ள ரெபா மோனிகா ஜான் தனது கணவருடன் கடற்கரையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், மாலத்தீவு ஒரு சொர்க்கம்.. போதும் என்று செல்வதற்கு யாருக்குமே மனம் வராது.. குறிப்பாக எங்களுக்கு வராது என்று கூறியுள்ளார் ரெபா மோனிகா ஜான்.