மேலும் செய்திகள்
ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள்
1330 days ago
நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக்
1330 days ago
கரூர் சம்பவம்: காந்தாரா நிகழ்ச்சி ரத்து
1330 days ago
ஜீ தமிழ் தொலைக்காட்சியின் 'என்றென்றும் புன்னகை' தொடரில் ஹீரோவாக சித்து கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தீபக். இவர், சின்னத்திரை நடிகையான அபிநவ்யா என்பவரை காதலித்து வந்த நிலையில், இருவரது திருமணமும் சமீபத்தில் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் திருமணமான கையோடு தீபக், 'என்றென்றும் புன்னகை' தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'என்றென்றும் புன்னகை' தொடரிலிருந்து தனிப்பட்ட சில காரணங்களால் அதிகாரப்பூர்வமாக விலகுகிறேன். நீங்கள் கொடுத்த அன்பிற்கும், ஆதரவிற்கும் மகிழ்ச்சி. இதே அன்பை புது சித்துவுக்கும் வழங்குங்கள். புதிய ப்ராஜெக்டில் விரைவில் சந்திக்கிறேன்' என அதில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2020ஆம் ஆண்டு ஒளிபரப்பாக ஆரம்பித்த இந்த தொடரில், நட்சத்திரா ஸ்ரீனிவாஸ், கவிதா, நிதின் ஐயர், ராஜேஸ்வரி, சுஷ்மா நாயர் உள்ளிட்ட நடிகர்கள் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். பிரபல சின்னத்திரை நடிகை நீலிமா ராணி இந்த தொடரை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
1330 days ago
1330 days ago
1330 days ago