மேலும் செய்திகள்
ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு?
1330 days ago
பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி
1330 days ago
இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்?
1330 days ago
தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் தனித்துவமான முறையில் கதை சொல்லி ரசிகர்களை ஈர்த்து வந்தது விஜய் டிவி. ஆனால், விஜய் டிவியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புதிய தொடர் ஒன்று ஆரம்பித்த சில நாட்களிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரஜின், சரண்யா துராடி, லதா, நிரோஷா, விக்னேஷ் என நடிகர் பட்டாளத்துடன் சமீபத்தில் ஒளிபரப்பாக ஆரம்பித்த தொடர் 'வைதேகி காத்திருந்தாள்'.கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி ஒளிபரப்பாக ஆரம்பித்த இந்த தொடர் சரியாக 37 எபிசோடுகள் வரை மட்டுமே ஒளிபரப்பாகியுள்ளது.
இந்த தொடரில் ஹீரோவாக நடித்து வந்த பிரஜின் தொடரை விட்டு சமீபத்தில் விலகினார். அவருக்கு பதிலாக முன்னா ரஹ்மான் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனாலும், கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதிக்கு பிறகு இந்த தொடர் ஒளிபரப்பாகவில்லை. அதுமட்டுமில்லாமல் ஸ்லாட்டிலும் அந்த தொடர் இடம்பெறவில்லை. இந்நிலையில் இந்த தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதா? இல்லை மொத்தமாக முடித்து வைக்கப்பட்டதா? என்ற அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.
1330 days ago
1330 days ago
1330 days ago