அமீரின் படத்தில் சஞ்சிதா செட்டி
ADDED : 1555 days ago
9 வருடங்களுக்கு பிறகு அமீர் இயக்கும் படம் இறைவன் மிகப்பெரியவன். இந்த படத்திற்கு வெற்றிமாறன் - தங்கம் இருவரும் கதை எழுதுகின்றனர். இதில் சூரி மற்றும் ஆர்யா தம்பி சத்யா நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு தற்பொழுது சென்னையில் நடைபெற்று வருகிறது. ஜே எஸ் எம் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் நாயகி பற்றிய அறிவிப்பு வெளியாகத நிலையில் இப்போது சத்யாவிற்கு ஜோடியாக நடிகை சஞ்சிதா செட்டி நடித்து வருகிறார்.