இங்கிலாந்து அரசின் லார்ட் பட்டம் பெற்ற எடிட்டர்
ADDED : 1371 days ago
தமிழ் சினிமாவின் முன்னணி எடிட்டராக இருப்பவர் பிரவீன் கே.எல். சமீபத்தில் இவர் பணியாற்றிய மாநாடு படத்தின் எடிட்டிங் அனைவராலும் பாராட்டப்பட்டது. ஆரண்யகாண்டம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். தற்போது சிம்பு நடிக்கும் பத்துல தல படத்தில் பணியாற்றி வருகிறார்.
இவர் இங்கிலாந்தில் உள்ள ஸ்காட்லாந்தில் ஒரு சதுரஅடி நிலத்தை விலைக்கு வாங்கி உள்ளார், இதனால் அந்நாட்டு அரசு இவருக்கு “லார்ட்“ என்று பட்டத்தை கொடுத்துள்ளது. இதனை பிரவீன் தெரிவித்துள்ளார். அவர் வாங்கியுள்ள ஒரு சதுரஅடி நிலத்தில் இவர் பெயரில் மரம் நட்டு அந்நாடு வளர்க்கும். இது அங்கு ஒரு பசுமை திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.