உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிராஜக்ட் கே - பிரபாஸ் படத்தின் படப்பிடிப்பில் அமிதாப்

பிராஜக்ட் கே - பிரபாஸ் படத்தின் படப்பிடிப்பில் அமிதாப்

பாலிவுட்டின் தனிப் பெரும் நடிகரான அமிதாப்பச்சன் ஹிந்திப் படங்களில் தான் அதிகம் நடித்துள்ளார். முதல் முறையாக தென்னிந்தியாவில் தெலுங்கில் சிரஞ்சிவி நடித்து வெளிவந்த 'சைரா' படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்தார். அதற்கடுத்து தமிழில் எஸ்ஜே சூர்யாவுடன் 'உயர்ந்த மனிதன்' படத்தில் நடிக்க ஆரம்பித்தார். அந்தப் படம் பிரச்சினையில் சிக்கி தற்போது தான் மீண்டுள்ளது. விரைவில் மீண்டும் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்கிறார்கள்.

அமிதாப் அடுத்து நடிக்கும் தெலுங்கு, ஹிந்திப் படமாக 'பிராஜக்ட் கே' அமைந்துள்ளது. 'மகாநடி' படத்தை இயக்கிய நாக் அஸ்வின் இயக்கும் இந்தப் படத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே ஆகியோருடன் அமிதாப்பும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார்.


இப்படத்திற்காக தனது முதல் நாள் படப்பிடிப்பில் நேற்று கலந்து கொண்டார் அமிதாப். அவருடன் நடித்த முதல் அனுபவம் குறித்து இன்ஸ்டாகிராமில், “இது எனக்கு கனவு நனவான ஒன்று. 'பிராஜக்ட் கே' படத்திற்காக சாதனையாளர் அமிதாப் சாருடன் முதல் நாள் படப்பிடிப்பை முடித்துள்ளேன்,” எனக் குறிப்பிட்டு அமிதாப்பின் 1975 படமான 'தீவார்' பட புகைப்படத்தைப் பகிர்ந்துளளார்.

பிரபாஸுடன் முதல் நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டது குறித்து டுவிட்டரில் அமிதாப், “முதல் நாள்..முதல் காட்சி..பாகுபலி பிரபாஸ் உடன் முதல் படம். அவரது சிறப்பு, திறமை, அதீத பணி ஆகியவற்றுடன் இணைந்து பணிபுரிவது ஒரு பெருமை, அதை கற்றுக் கொள்ள வேண்டும்,” என பிரபாஸைப் பெரிதும் பாராட்டியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !