பிரபல சீரியல் இயக்குநரின் ரொமாண்டிக் புகைப்படம்!
ADDED : 1324 days ago
விஜய் டிவியின் ஆஸ்தான இயக்குநரான பிரவீன் பென்னட், சின்னத்திரை நடிகர்கள் போலவே மிகவும் பிரபலமானவர். பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2 ஆகிய ஹிட் சீரியல்களை இயக்கி வருகிறார். இவர் தற்போது தனது மனைவியுடன் துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர் தனது மனைவியுடன் காதலர் தினத்தை கொண்டாடும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை வரலாற்றில் நடிகர் நடிகைகளுக்கு இணையாக இயக்குநரான பிரவீன் பென்னட்டுக்கும் ரசிகர் கூட்டம் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரவீனின் இந்த புகைப்படத்தை பார்க்கும் பலரும் அவருக்கு காதலர் தின வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.