உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜெய்யுடன் மீண்டும் இணையும் சுசீந்திரன்

ஜெய்யுடன் மீண்டும் இணையும் சுசீந்திரன்

சுசீந்திரன் இயக்கத்தில் கிராமத்து கதைக்களத்தில் ஜெய் நடித்து, இசையமைத்து தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் வீரபாண்டியபுரம். இந்த படத்திற்கு பிறகு மீண்டும் ஜெய்யை வைத்து புதிய படத்தை இயக்கவிருப்பதாக இயக்குனர் சுசீந்திரன் அறிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது : எனது இயக்ககத்தில் ஜெய் நடிப்பில் வெளியான வீரபாண்டியபுரம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை ஜெய் சிங்கிள் ஹீரோவாக நடித்து ஓடவில்லை என பலர் கூறியுள்ளனர். ஆனால் ராஜா ராணி, சென்னை 28, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் மட்டுமே ஓடின. இதை உடைத்திருக்கிறது வீரபாண்டியபும் திரைப்படம் . ஜெய்யும், நானும் மீண்டும் புதிய படம் ஒன்றில் இணைந்திருக்கிறோம். இந்தப் படத்திற்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !