உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முதல் முறையாக ஓட்டளித்த ரஜினி ரசிகர்

முதல் முறையாக ஓட்டளித்த ரஜினி ரசிகர்

அரசியலுக்கு வருவதாக நடிகர் ரஜினிகாந்த் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக சொல்லி வந்த. புதுக்கோட்டை மாவட்டம் ராஜகோபாலபுரத்தை சேர்ந்தவர் மகேந்திரன். ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். இவர் என்றைக்கு ரஜினிகாந்த் அரசியலுக்கு வருகிறாரோ, அன்றைக்குத் தான் தன்னுடைய முதல் ஓட்டை செலுத்த வேண்டும் என்று 30 ஆண்டுகளாக ஓட்டளிக்காமல் இருந்திருக்கிறார். தனது மனைவி தேர்தலில் போட்டியிட்டபோது கூட மகேந்திரன் ஓட்டு செலுத்தவில்லை. ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று உறுதியாக அறிவித்த நிலையில் இன்று(பிப்., 19) நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனது முதல் ஓட்டை பதிவு செய்திருக்கிறார் மகேந்திரன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !