சிறந்த படம்: புஷ்பாவுக்கு தாதா சாஹேப் பால்கே விருது
ADDED : 1368 days ago
அரசு அல்லாத தனி அமைப்பு ஒன்று ஆண்டுதோறும் இந்திய அளவில் சிறந்த திரை கலைஞர்களுக்கு தாதா சாஹேப் பெயரில் விருது வழங்கி வருகிறது. 2021ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா நேற்று முன்தினம் (21ம் தேதி) மும்பையில் நடந்தது.
இதில் கடந்த ஆண்டின் சிறந்த படமாக புஷ்பாவுக்கு விருது வழங்கப்பட்டது. சிறந்த நடிகராக 83 படத்தில் கபில்தேவாக நடித்த ரன்வீர் சிங், நடிகையாக மிமி படத்தில் நடித்த கீர்த்தி சனோன், சிறந்த நடிகருக்கான சிறப்பு விருது ஷெர்ஷா படத்தில் நடித்த சித்தார்த் மல்ஹோத்ரா, உள்பட பலருக்கு விருதுகள் வழங்கப்பட்டது. திரைப்படத்துக்கான சிறப்பான பங்களிப்புக்காக ஆஷா பரேக் விருது பெற்றார்.