அனுபமாவுக்கு அம்மாவாக நடிக்கும் பூமிகா
ADDED : 1407 days ago
மலையாளத்தில் கடந்த வருடம் அனுபமா பரமேஸ்வரன் நடித்த மணியறையிலே அசோகன் மற்றும் இந்தவருடம் அதர்வாவுடன் நடித்த தள்ளிப்போகாதே ஆகிய படங்கள் சமீபத்தில் வெளியாகின. இந்தநிலையில் தற்போது மலையாளத்தில் பட்டர்பிளை என்கிற படத்தில் நடித்து வருகிறார் அனுபமா. கந்தா சதீஷ் பாபு என்பவர் இந்தப்படத்தை இயக்குகிறார். இந்தப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
15 வருடங்களுக்கு முன் விஜய், சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த பூமிகா, இந்தப்படத்தில் அனுபமாவின் அம்மாவாக நடித்துள்ளார். ஏற்கனவே மலையாளத்தில் பிரம்மராம் மற்றும் பட்டி என இரண்டு படங்களில் நடித்துள்ள பூமிகா கிட்டத்தட்ட ஒன்பது வருட இடைவெளிக்கு பிறகு மலையாளத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தாய் மகள் பாசம் பற்றியும் இளம்பெண்களின் சுதந்திரம் பற்றியும் இந்தப்படம் பேசுகிறதாம்.