உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / காதல் கிசு கிசு : கமெண்ட் செய்த விஜய் தேவரகொண்டா

காதல் கிசு கிசு : கமெண்ட் செய்த விஜய் தேவரகொண்டா

தெலுங்குத் திரையுலகின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டாவும், இளம் நடிகைகளில் ஒருவரான ராஷ்மிகா மந்தனாவும் காதலிப்பதாகவும், அவர்களுக்கு இந்த வருடத்திற்குள் திருமணம் என்றும் பல பாலிவுட் மீடியாக்கள் செய்திகளை வெளியிட்டு வந்தன.

இருவருமே ஹிந்திப் படங்களில் அறிமுகமாவதன் மூலம் பாலிவுட்டில் கால்பதித்துள்ளனர். விரைவில் அவர்களது நேரடி ஹிந்திப் படங்கள் வெளியாக உள்ளது. இதனால், பொறாமை அடைந்து யாராவது அவர்களைப் பற்றிய வதந்திகளைக் கிளப்பி விட்டுள்ளதாகவே தெலுங்குத் திரையுலகில் சொல்கிறார்கள். கடந்த சில நாட்களாக பல மீடியாக்களில் விஜய், ராஷ்மிகாவின் காதல் பற்றிய செய்தி வெளியானது. அவற்றை விஜய்யும் படித்திருப்பார் போலிருக்கிறது.

நேற்று சமூகவலைதளத்தில் 'வழக்கம் போல நான்சென்ஸ்' என்று ஒரு பதிவிட்டுள்ளார் விஜய். எதைப் பற்றி அவர் இப்படி பதிவிட்டுள்ளார் என்று அவர் தெரிவிக்கவில்லை என்றாலும் படிப்பவர்களுக்குத் தெரியாதா ?.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !