கமல்ஹாசனின் விக்ரம் படப்பிடிப்பு நிறைவு
ADDED : 1551 days ago
கமல்ஹாசன் நடிக்கும் 232வது திரைப்படமான விக்ரம் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், சந்தான பாரதி உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்தப்படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பை முடித்த கமல்ஹாசன் மற்றும் படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைராகி வருகிறது. விக்ரம் படம் ஏப்ரல் 29 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.