வலிமை படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?
ADDED : 1318 days ago
அஜித்குமார் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் பிப்ரவரி 24 ஆம் தேதி வெளியான வலிமை திரைப்படம் விமர்சனங்களுக்கு மத்தியிலும் வசூல் சாதனைகளுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. வலிமை படத்தின் எல்லா மொழிகளுக்குமான சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் ஓடிடி உரிமைகளை ஜீ நெட்வொர்க் நிறுவனம் பெற்றுள்ளனர் . கிட்டத்தட்ட 65 கோடிக்கு மேல் வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் வலிமை திரைப்படம் மார்ச் மாத இறுதியில் ஓடிடியில் வெளியாகலாம் என கூறப்படுகிறது .