நானே வருவேன் படத்தில் இணைந்த இரண்டு பிரபலங்கள்
ADDED : 1551 days ago
தனுஷ் நடிப்பில் செல்வராகவன் தற்போது இயக்கி வரும் படம் நானே வருவேன். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தில் தனுஷ் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இப்படத்தில் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமாகியுள்ளார். இவர் வாகை சூடவா, மாரி, மாரி-2, காஷ்மோரா என பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். அவரையடுத்து ஸ்டன்ட் மாஸ்டராக திலீப் சுப்பராயன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் வட சென்னை, தெறி, வலிமை என பல படங்களுக்கு ஸ்டன்ட் அமைத்தவர். இந்த தகவலை செல்வராகவன் வெளியிட்டுள்ளார்.