விஜய் தேவரகொண்டா ஒரு பயந்தாங்கொள்ளி : அனன்யா பாண்டே
ADDED : 1415 days ago
பாலிவுட்டில் பல படங்களில் நடித்தவரான அனன்யா பாண்டே, தற்போது விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கு, ஹிந்தியில் தயாராகி வரும் லைகர் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். பூரி ஜெகந்நாத் இந்த படத்தை இயக்குகிறார்.
அனன்யா பாண்டே அளித்த ஒரு பேட்டியில், தான் நடிக் கும் படங்களில் தைரியம் மிக்கவராகவும், முரடன் போலவும் நடிக்கிறார் விஜய் தேவரகொண்டா. ஆனால் நிஜத்தில் அவர் ரொம்ப அமைதியானவர். சினிமாவில் காட்டும் வீரத்தை அவர் நிஜத்தில் காட்டுவதில்லை. அவர் ஒரு பயந்தாங்கொள்ளியாக இருக்கிறார் என்று கூறியுள்ளார். அனன்யாவின் இந்த கருத்துக்கு விஜய் தேவரகொண்டாவின் ரசிகர்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறார்கள்.